Monday, May 20, 2013

அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது (Over Work) உங்களைக் கொல்லுமா?



கொல்லாது............ என்று 
அடித்துச்சொல்கிறார் 
Dr. Joseph F Montague. 
இவர் குடல், வயிறு 
சம்பந்தமான நோய்களைக் 
குணப்படுத்தும் 
ஒரு மருத்துவர்.














அவர் மேலும் சொல்கிறார்:
அளவுக்கு மீறி அதிக வேலையைச் 
செய்பவர் என்று நீங்கள் உங்களை நினைத்தால் அதற்குக் கீழ்க்கண்ட 
ஏதாவது ஒன்றுதான் காரணமாக 
இருக்கும்.

"நீங்கள் உங்களுக்குப் 
பொருந்தாத (wrong) 
வேலையில் இருக்கிறீர்கள் 
அல்லது 
அடைய முடியாத 
லட்சியங்களை 
மனதில் உருவாக்கிக்
கொண்டிருக்கிறீர்கள் 
அல்லது 
நேரத்திற்குச் சாப்பிடும் 
பழக்கம் இல்லாதவராக 
இருந்திருப்பீர்கள். 
கடைசியாக
உப்புப் பெறாத 
விஷயத்திற்காகக் 
கவலைப்படுபவராக 
இருந்திருப்பீர்கள்."

U.S. News & World Report 
என்ற பத்திரிகைக்கு அவர் 
கொடுத்த பேட்டியிலிருந்து 
சில பகுதிகள்:

கேள்வி: டாக்டர்
சமீப காலமாக
வயிற்றுப் புண் (Ulcers), 
இருதய வலி 
(Heart aches), இன்னும் 
சில வியாதிகளால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்களே
இது, அளவுக்கு மீறி அதிக 
வேலையைச் செய்வதனாலா?
டாக்டர்: நிச்சயமாக இல்லை. 
என்னுடைய வாடிக்கையாளர்களில் 
யாருமே அதிக வேலையினால் 
செத்ததில்லை. 
அதீதமுயற்சி-அதாவது பேராசை
அடைய முடியாத லட்சியக் 
கனவுகள்தான். 
ஏமாற்றம் கவலை என்று 
பல பிரச்சினைகளை உண்டாக்கி வியாதியஸ்தர்களாக ஆகிறார்கள்.
கேள்வி: ஓயாத பதற்றம் 
(nervous tension) என்றால் என்ன
எதனால் அது வருகிறது?
டாக்டர்: ஓயாத பதற்றம் 
என்பது 
ஒரு பயப்பட வேண்டிய 
சமாச்சாரம் இல்லை. 
அது ஓரளவாவது 
எல்லோரிடமும் இருக்கும்
இருக்க வேண்டும். 
அது அளவோடு இருந்தால்தான் 
சில உபயோகமான விஷயங்களை 
நாம் அணுக முடியும். 
ஓயாத பதற்றம் 
ஒரு பிரச்சினையே 
இல்லை.

Tuesday, May 14, 2013

அம்மாவும் நானும் - ஒரு flashback









மே மாதம் 12ஆம் தேதி - 
அன்னையர் தினம் (Mother'sDay). 
ஒவ்வொரு வருடமும் மே மாதம் 
இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை 
அன்னையர் தினமாக உலகத்தினர் 
கொண்டாடிவருகின்றனர்.
இதன்ஆரம்பம்,
நூறாண்டுகளுக்குமுன் - 
1907இல் அமெரிக்காவில் 
Anna Javis,Julia Ward Howe 
என்ற இரண்டு பெண்மணிகளுக்குத் 
தாய்மையையும் தாய்மார்களையும் 
நினைவுகூர ஒரு நாள் 
ஒதுக்கப்பட வேண்டும் 
என்ற யோசனை தோன்றியது. 
அந்தச் சின்ன விதை
இன்று ஒரு பெரிய மரமாக வளர்ந்து
இன்று கிட்டத்தட்ட 50 நாடுகளுக்கு 
மேல் இந்த யோசனையை ஏற்றுத் 
தாய்மார்களைக் கெளரவிக்க 
தொடங்கியுள்ளார்கள்.
1914இல் அமெரிக்க ஜனாதிபதி
உட்ரோ வில்ஸன் இதை 
ஒரு விடுமுறை நாளாக அறிவித்து 
அதற்கு  ஒரு விசேஷ 
அந்தஸ்த்தைக் கொடுத்தார்.
அன்னையரை ஞாபகப்படுத்திக் 
கெளரவிக்கும் நாளாக ஆரம்பித்த 
விழாஇன்று அமெரிக்காவிலேயே 
ஒரு சாதனை படைத்த வர்த்தக 
நிகழ்வாக ஆகிவிட்டது. 
ஒரு சின்ன புள்ளி விவரம் - 
போன வருடம் அமெரிக்கர்கள் 
அன்னையர் தினத்தன்று 
செலவழித்த டாலர்கள்
புஷ்பங்கள் - $ 2.6 பில்லியன்.
பரிசுப் பொருள்கள் - $ 1.53 பில்லியன்.
வாழ்த்து அட்டைகள் - $ 68 மில்லியன்.
இதைத் தவிர, நகைகளுக்காகச் 
செலவு செய்தது தனி. 
Anna Javis இதை 
எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 
அவர்கள் நோக்கம், 
தாய்மையைக் கெளரவப்படுத்த 
வேண்டிய அவசியத்தினால். 
அமெரிக்க வாழ்க்கையைப் 
பற்றி அறிந்தவர்களுக்கு 
அங்கே கூட்டுக் குடும்பம் 
என்ற concept கிடையாது 
என்பது தெரிந்திருக்கும்.
மகனோ, மகளோ 18 வயது 
ஆனபின் சுதந்திரப் பறவைகளாக 
வீட்டை விட்டு சுயேச்சை 
வாழ்க்கையைத் 
தேர்தெடுப்பார்கள். 
பெரியோர்களின் தொடர்பு 
அவ்வளவாக இருக்காது. 
இந்தச் சூழ்நிலையில்தான் 
Mother's Day, Father's Day,  
என்று ஆரம்பித்தார்கள்.
இந்தநாகரீகம்,மேல்நாடுகளில் 
பரவ ஆரம்பித்தது ஆச்சரியமான 
விஷயம் இல்லை. 
கூட்டுக் குடும்பம் என்ற வட்டத்தில் 
வாழும் இந்தியா,சீனா, ஜப்பான் 
போன்ற நாடுகளும் இதைப் 
பின்பற்ற ஆரம்பித்ததுதான் 
ஒரு விந்தையான விஷயம்.
மேல்நாட்டுக் கலாச்சாரங்கள் 
பலவற்றைச் சமீபக் காலமாகத் 
தனதாக்கிக்கொண்ட இந்தியா
இந்த Mother's Dayஐயும் 
பின்பற்ற ஆரம்பித்தது 
ஆச்சரியப்பட வேண்டிய 
விஷயம் இல்லை. 
கொஞ்சம் நெருடலான 
சமாச்சாரம்தான்.
அன்னைதான் எல்லாம்என்று 
சின்ன வயதிலிருந்து 
சொல்லப்பட்ட 
தாரக மந்திரம். 
புராண இதிகாசங்களிலிருந்து 
கதைகள், நாடகங்கள்
கவிதைகள் வரை 
தாய்மையையும் தாயாரையும் 
பற்றி எழுதி, பேசி வந்திருக்கிறார்கள்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாய் சொல்லைத் தட்டாதே
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தாயில்லாமல் நான் இல்லை
மாத்ரு தேவோ பவ
என்று உபதேச மொழிகளினால் 
சிறுவர் சிறுமியர் brainwash 
செய்யப்பட்டிருக்கின்றனர். 
அப்படிபட்ட கலாச்சாரத்திலா
ஒரே ஒரு நாள் மட்டும் 
தாயாரை நினைவுகூருங்கள் 
என்று கொண்டாடுவது?
கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் 
இதுவும் ஒரு நன்மைக்குத்தான். 
சமீப காலங்களில் மீடியாக்களில் 
அதிகம் பேசப்படும், எழுதப்படும் 
விஷயம் - 
"பெண்கள் கொடுமை" 
(Women Abuse) பற்றித்தான். 
இதில் Mother Abuseம் அடங்கும்.
கடவுளுக்குச் சமமாக வணங்க 
வேண்டிய தாயாரை 
வருடம் முழுவதும் 
கொடுமைசெய்துவிட்டு 
அதற்குப் பிராயச்சித்தமாக 
ஒரு நாள் "Sorry,I love you" 
என்று பரிசு கொடுத்து 
அன்னையைக் கெளரவிக்கும் 
நாளை வரவேற்க வேண்டியதுதான்.

டி.வி.யில் பிரபலங்கள் 
தங்கள் தாய்மார்களைப் பற்றிப் 
பேசுவதைக் கேட்கும்போது 
நெகிழ்வாகவும் 
சந்தோஷமாகவும் இருக்கிறது. 

நானும் என் பங்கிற்கு 
இந்த அன்னையர் தினத்தில் 
என் தாயாரைப் பற்றிச் 
சில வரிகள் எழுதலாம் 
என்று நினைக்கிறேன்.
என் தாயார் பெயர் - சுந்தரி.
வாழ்ந்த காலம் - 1911-2003  
92 வயது.










Tuesday, May 07, 2013

அதிகம் தெரிந்திராத மாமணிகளில் ஒருவர்



உலகத்தில் உள்ள ஒவ்வொரு 
நாட்டிலும் வெவ்வேறு 
துறைகளில் மேதைகளும்
அறிவாளிகளும்,படைப்பாளிகளும் இருக்கிறார்கள்- 
இருந்துகொண்டும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரைத்தான் 
மக்கள் celebritiesஆக ஆக்கி
பேசி, எழுதி வருகிறார்கள். 
அந்த celebrities statusஐ 
விரும்பாமல்
"தான் உண்டு 
தன் வேலை உண்டு" 
என்று இருந்துகொண்டு 
அதே சமயத்தில் 
தாங்கள் தேர்தெடுத்துக்கொண்ட துறைக்காகப் பாடுபட்டு 
வாழும் மாமணிகள் 
நிறைய பேர் இருந்தார்கள்
இன்னும் இருக்கிறார்கள். 

அந்த மாமணிகளில் 
ஒருவர்தான் சமீபத்தில் 
வைகுண்ட பிராப்தி அடைந்த 
நல்லூர் அரசாணிபாலை 
ஸ்ரீ.உ.வே.
கோபாலதேசிகாசார்யர் 
ஸ்வாமிகள் 
(மீமாஸ சிரோமணி) 
(1914-2013). 














அவர் நிச்சயம் வைகுண்டத்திற்குத்
தான் சென்றிருப்பார். 
மகா பாபியான அஜாமேளன் 
கடைசி காலத்தில் 
"நாராயண" 
என்று சொன்னதனால் 
அவனுக்கு வைகுண்ட பிராப்தி 
கிடைத்தது என்று புராணிகர்கள் 
சொல்லிவருகிறார்கள். 
அப்படியிருக்க, வாழ்ந்த 
100 ஆண்டுகளிலும் 
கடைசி மூச்சு இருக்கும்வரை 
"ராமா, கிருஷ்ணாபெருமாளே" 
என்று சொல்லிவந்த 
பெரியவர் வேறு எங்கு 
சென்றிருப்பார்?

யார் இவர்? இவர் எதில் 
பாண்டித்தியம் அடைந்திருக்கிறார்
இவர் என்ன சாதித்திருக்கிறார்? 

Thursday, May 02, 2013

ஞமலி (நாய்) புராணம் தொகுத்தவர்: வேதவியாச தாசன் தி.சு. பாம்பரசனார் பகுதி -4 நிறைவு பகுதி



பிரபா - நாகராஜன் உரையாடல் தொடர்கிறது.
பிரபா: 
என் கேள்விக்கு என்ன பதில்?
நான்: 
(பார்த்த)கேட்ட ஞாபகம் இல்லையோ?
பிரபா: 
சினிமாப்  பாட்டு புதிர் 
போதும் என்று நினைக்கிறேன். விஷயத்திற்கு வாரும்.
நான்: 
சரி.. முதலில் நாயின் 
மூலத்தைப் பற்றிக் கொஞ்சம் 
ஆராய்வோம்.
நாய் ஒரு அனைத்துண்ணி. 
பாலுண்ணி (பாலூட்டி) விலங்கு.
இப்பொழுது உலகம் முழுவதும்
"Pet" ஆக வளர்க்கப்படும் 
இந்த நாய் ஜென்மம் எப்போது
எங்கே, ஏன் இப்படி வளர்ப்பு 
நாயாக மாறிற்று என்பதை 
இன்னும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துவருகிறார்கள். 
எல்லோராலும் அநேகமாக 
ஒத்துக்கொள்ளப்பட்ட 
விஷயம் என்னவென்றால் 
நாயின் மூதாதையர்கள் 
Eurasian Grey Wolf 
(canis lupis) - 
ஐரோப்பியக் கண்டத்து 
ஓநாய்கள்தான். 
வெறித்தனம் கொண்ட 
ஓநாய்கள் எப்படி நம்முடைய 
நண்பர்களான நாய்களாக 
மாறின  என்பதுதான் 
ஆராய்ச்சி.
2005ஆம் ஆண்டு DOG 
genome (DNA) 
டாஷா என்ற Boxer வகை 
நாயிடமிருந்து எடுக்கப்பட்டது. 
இதன் முழு விபரம் இன்னும் வெளிவரவில்லை.











இதற்கு முன் வெளியிடப்பட்ட 
ஆராய்ச்சிகள் நாய்கள் 
கிழக்கு ஆசிய பகுதியிலிருந்து 
வந்திருக்க வேண்டும் 
என்று சொல்கின்றன.
எது எப்படியோ, குறுக்கு 
புத்தியும், விஷமத்தனமும் 
உள்ள ஓநாய் வர்க்கம்- 
அன்பு,பாசம்,நம்பிக்கை
புத்திசாலித்தனம் உள்ள 
நாயாக மாற்றப்பட்டது 
என்பது வரவேற்க 
வேண்டிய விஷயம்தானே?
பிரபா: 
நாய்களில் எத்தனை 
வகைகள்
தமிழ் இலக்கியத்தில் அவை 
எப்படி அழைக்கப்படுகின்றன?

Monday, April 22, 2013

ஞமலி (நாய்) புராணம் தொகுத்தவர்: வேதவியாச தாசன் தி.சு. பாம்பரசனார் பகுதி - 3


பிரபா -நாகராஜன் 
உறையாடல் தொடர்கிறது...
பிரபா: Build-up பண்ணியது 

போதும் என்று நினைக்கிறேன். 
விஷயத்திற்கு வரலாமே?
நான்: கொஞ்சம் எனக்கு நானே 
அட்சதை போட்டுக்கலாம் 
என்று நினைத்தேன். 
அது உனக்குப் பொறுக்கவில்லை. 
சரி,புராணத்தைத் தொடர்கிறேன். 
ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். 

நாய் கடவுள்களால் மனிதனுக்காகப் படைக்கப்பட்ட ஒரு ஜந்து. 
ரொம்பரொம்பப் பழைமையான 
ரிக் வேதத்திலேயே நாயைப் 
பற்றிப் பேசப்பட்டிருக்கிறது.
 ‘சரமா’ என்ற பெண் நாயைப் 
பற்றி ரிக் வேத ஸ்லோகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 
‘சரமா’ தேவேந்திரனுக்குச் 
சொந்தமான நாய். 
இதுதான் எல்லா நாய்களுக்கும் 
தாயார். தேவ-ஷூனி (Shuni) 
என்ற பெயரும் உண்டு. 
ஒரு சமயம்,அரக்கர்கள் 
தேவலோகப் பசுக்களைக் 
களவாடிச் சென்றபோது, 
சரமாதான் அந்தப் பசுக்களின் 
இடத்தைக் கண்டுபிடித்து 
அவற்றை மீட்டது. 
பின்னால் எழுதப்பட்ட  
தைத்ரேய பிராமணா, 
ஆபத்ஸம்ப சூத்ரங்கள் - 
சரமா, நாய் உருவத்தில் இருக்கும் 
ஒரு பெண் தெய்வம் 
என்று எழுதியிருக்கிறார்கள்.
இந்த நாய் தெய்வம், 

இந்திரனால் உலகத்தைச் 
சுற்றிவர அனுப்பப்பட்டதாம். 
அச்சமயம் மக்கள் பசியால் 
வாடுவதைப் பார்த்து, 
சரமா தண்ணீரை உண்டுபண்ணி வயல்களில் பாய்ச்சி மக்களுக்கு 
உணவு அளித்ததாம். 
மனிதர்களுக்குப் பால் கிடைக்கும் 
வகையில் பசுக்களையும் 
சிருஷ்டித்ததாம்.
வராஹ புராணத்தில் சரமாவைப் 
பற்றி அவ்வளவு உயர்வாகச் சொல்லப்படவில்லை. 















இந்திரன்,ஒரு சமயம் அசுரர்களிடம் 
தோல்வி அடைந்து தேவ பதவியை 
இழந்து விட்டான்.
அந்த பதவியை மீண்டும் அடைய
ஒரு பசு யாகம் பண்ண நினைத்தான். 
‘பானி’ என்ற அசுரர்கள் தேவலோகப் பசுக்களைக் கவர்ந்துவிட்டார்கள். 
சரமா, பசுக்களைத் தேடிச் 
சென்றது. 
அசுரர்கள் சரமாவுக்குப் 
‘பால் கொடுத்து’ தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டார்கள். 
(இதுதான்  first recorded 
லஞ்சம் - அதுவும் after all milk 
என்று நினைக்கிறேன்) 
சரமாவும் வாங்கின லஞ்சத்திற்கு 
நேர்மையாக இருக்க தேவேந்திரனிடம் சென்று தனக்கு ஒன்றும் தெரியாது 
என்று "உண்மையை" பேசிவிட்டது.

Monday, April 15, 2013

ஞமலி (நாய்) புராணம் தொகுத்தவர்: வேதவியாச தாசன் தி.சு. பாம்பரசனார் பகுதி - 2


குருமார்களுக்கு வணக்கம்
விநாயகருக்கு வணக்கம்
   எல்லா தெய்வங்களுக்கும் 
வணக்கம்.
காலபைரவரை மனதில் நினைத்து
தி.சு. பாம்பரசன் என்ற 
திருநெல்வேலி 
சுப்ரமணிய நாகராஜன் 
இந்தநாய்புராணத் தொகுப்பைச் சமர்பிக்கிறேன். 








(என் முழுப் பெயரைக் 

கொடுத்ததன் காரணம் 
பிற்காலத்தில் ஒருவேளை
இது பிரபலமான 
காவியமாக ஆகும் பட்சத்தில் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் 
மண்டையைப் போட்டுக் 
குழப்பிக்கொள்ளக் கூடாது 
என்ற நல்ல எண்ணம்.)
இந்தப் புராணத் தொகுப்பில் 
பங்கேற்கப் போகும் 
இன்னொரு நபர் 
என் மனைவி - 
பிரபா நாகராஜன். 
பிரபா -அவர்கள் பெற்றோர்கள் 
இட்ட பெயர். 
என்னைத் திருமணம் செய்தபின் 
எங்கள் வழக்கப்படி என் பெயரைச் 
சேர்த்துக்கொண்டார்கள். 
இந்த இணைப்பின்படி பெரும்பாலான இந்தியப் பெண்மணிகள் தங்கள் 
சுய அடையாளத்தை இழந்து
 "கணவனே கண் கண்ட தெய்வம்" 
என்ற தாரக மந்திரத்தில் ஊறிப்போய் வாழ்கிறார்கள் என்பது கண்கூடு.
என் மனைவி கல்யாணமாகியும் 
தனக்கு என்று ஒரு தனிஅடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டாள். 
சங்கீதம், தத்துவம், சமஸ்கிருதம்
நாட்டியம் என்று பல துறைகளில் 
பட்டம் பெற்றவர்கள். 
பார்வதி-பரவேஸ்வரர்
ராதா-கிருஷ்ணன்
வள்ளுவர்-வாசுகி
இந்த லட்சிய தம்பதிகளுக்குப் பிறகு 
பிரபா-நாகராஜன் தம்பதிகள்தான் 
(என்று யாரும் சொல்லவில்லை) 
நாங்களே சொல்லிவருகிறோம் - 
51 ஆண்டுகளாக.
என் மனைவிதான் என் 
முதல் விசிறி. 
என் கட்டுரைகள் மனதில் 
தோன்றியவுடன் அவளுடன்தான் விவாதிப்பேன். 
இதுவரை - "one sided"தான்.
ஏனோ தெரியவில்லை - 
இந்த "நாயை"ப் பற்றி 
எழுதப்போகிறேன் என்று 
சொன்ன மாத்திரம் அவளிடமிருந்து ஏகப்பட்ட ஆட்சேபணைங்கள்
எங்கள் உரையாடலின் 
ஒரு பகுதி இங்கே:

பிரபா: வேற சப்ஜக்டே 
கிடைக்கலையா
போயும்போயும் எல்லாராலும் 
திட்டப்படும் ஒரு கடை 
ஜென்மத்தைப் பற்றியா எழுதப்போகிறீர்கள்
உங்களுக்குத்தான் நாயைக் 
கண்டாலே பயமாச்சே
எத்தனை தரம் அந்த நிகழ்ச்சியைப் 
பற்றிப் புலம்பியிருக்கிறீர்கள்.
நான்: ஓ, அதைச் சொல்கிறாயா