Saturday, September 17, 2011

நெடுநீர்





நெடுநீர் தீர்கசூத்ரி ப்ரோக்ராஸ்டிநேஷன்.

நெடுநீர்-அழகான தமிழ்ச் சொல் : குறள் 605.
தீர்கசூத்ரிசமஸ்கிருதச் சொல்: கீதை 18.28.
ப்ரோக்ராஸ்டிநேஷன் – procrastination – ஆங்கிலம்: 
சமீப காலத்தில் மீடியாக்களில் அதிகமாகப் பேசப்படுவது, எழுதப்படுவது.

வற்றின் அர்த்தம் என்ன?

அர்த்தம் தெரியாமலேயே இந்தவார்த்தைகளின் முழு பரிமாணத்தையும் நம்மில் பல பேர் எல்லா விஷயங்களிலும், சில பேர் சில நேரங்களிலும் கடைப்பிடித்து வந்திருக்கிறோம்.தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம். குழப்பியது போதும் என்று நினைக்கிறேன்இந்த மூன்று சொற்களும் ஒரே அர்த்தத்தைத்தான் குறிக்கின்றன.

புரியும் தமிழில் சொல்ல வேண்டுமானால்இதன் அர்த்தம் காலம் தாழ்த்தல், காலம் கடத்தல், ஒத்திப்போடுதல், தள்ளிப்போடுதல், நீடித்துச் செய்யும் இயல்பு………. இப்பொழுது நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்….. guilty ornot guilty? - குற்றவாளியா? நிரபராதியா?

Wednesday, September 14, 2011

நீண்ட அறிமுகம்

‘திருநெல்வேலி’ யின் ‘குப்பை’
 அறிமுகம் – 2 பகுதிகள்.


முதலில் – திருநெல்வேலி – நீண்ட உரை.


திருநெல்வேலி – சிலபல தமிழர்களைத் தவிர மற்ற எவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத பெயர். அந்த சிலபல தமிழர்களுக்கும் இந்தப் பெயர் கவனத்துக்குக் கொண்டு வருவது - திருநெல்வேலி அல்வா. சில அறிவு ஜீவிகளுக்கு, நெல்லையப்பர் – காந்திமதி, தாமிரபரணி, குற்றாலம், கட்டபொம்மன் என்ற பெயர்கள் ஞாபகத்திற்கு வரலாம்.


ஆனால் நிச்சயமாக, கண்டிப்பாக, சத்தியமாக திருநெல்வேலி என்பது ஒருவருடைய பெயர் என்று யாரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.


ஆனால் அதுதான் உண்மை.


அந்தக் கோடியில் (ஏன் 1,76,000 கோடியில் என்றுகூட சொல்லலாம்) ஒரு பெயருக்குச் சொந்தமானவர்தான் இந்த வலைப்பூ ஆசிரியர். அதாவது அடியேன்….


திருநெல்வேலி என்பது என் பெற்றோர்கள் எனக்குச் சூட்டிய பெயர் இல்லை. இது உலக வல்லரசான அமெரிக்க சர்க்கார் எனக்கு வைத்த பெயர்.


அது எப்படி? ….. கேள்விக்குப் பதில் இந்த “Flashback”ல்……