Monday, May 28, 2012

மாற்றுத் திறனாளிகள் -ஒரு கண்ணோட்டம்


இது என்ன புது வார்த்தை என்று கேட்கத் 
தோன்றுகிறதா?

ஆம், புது வார்த்தைதான். 
பழமையான தமிழ்ச் சொல்லுக்குப் 
புது விளக்கம் தேவைப்பட்டது. 
அதனால் இந்த வார்த்தை உண்டாயிற்று. 
ஊனமுற்றோர் என்று சொன்னவுடன் 
எல்லோர் மனதிலும் உடனே 
ஒரு image தோன்றும். 
உடலில் குறைபாடு இருப்பவராகவோ 
அல்லது ஐம்பொறிகளில் எதிலாவது 
குறைபாடு இருப்பவராகவோ இருப்பவர் 
என்று நினைத்து நல்ல மனதுடையவர்கள் 
பரிதாபப்பட வாய்ப்பு உண்டு.

செவிடர்கள், குருடர்கள், நொண்டிகள்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று 
சினிமாவிலும் டிராமாவிலும் நகைச்சுவை 
என்ற பெயரில் இவர்களை வைத்து 
நையாண்டி செய்து வந்திருக்கின்றனர். 
இன்னும் அது தொடர்கிறது. 
ஊனம் ஒரு பலவீனம் இல்லை. 
அதையும் தாண்டி மனிதன் 
வெளிபடுத்தக் கூடிய ஆற்றல் இருக்கிறது 
என்ற ஒரு யதார்த்த நிலையை 
யாரும் நினைப்பதாகத் தெரியவில்லை.

ஊனமில்லாதவர்களுக்கு ஒரு திறன் 
இருந்தால் ஊனமுற்றவர்களுக்கு வேறு 
ஒரு மாற்றுத் திறன் இருக்கிறது. 
இதனால்தான் இவர்களை 
மாற்றுத் திறனாளிகள் 
என்று அழைக்கலாம் என்று 
தமிழ் தெரிந்தவர்கள் 
இந்தச் சொல்லை உருவாக்கினர்.