Sunday, September 30, 2012

மூத்த குடிமக்கள்(Senior Citizens) யார் குழந்தைகள்?


பகுதி 2
                                                                             வயோதிகமும் வயோதிகர்களும்” 
என்ற  தலையாய பிரச்சினையை 
எப்படி இந்திய அரசும்  இந்திய மக்களும்
ஒரு அலட்சிய நோக்குடன் அணுகுகிறார்கள் 
என்பதைப் பகுதி 1இல் பார்த்தோம்.

வளர்ந்த  நாடுகளைப் போல்
இந்தப் பிரச்சினைக்கு ஒரு 
தெளிவான  நோக்குடன் 
விரிவான திட்டம் விரைவாக 
உருவாக்கப்பட வேண்டும்.

அப்படிச் செய்யத் தவறினால்
வருங்காலத்தில்  இது சமூக, 
பொருளாதாரப் பிரச்சினையாக 
உருவாவதற்கான வாய்ப்பு 
நிறையவே உள்ளது.

யார், ‘மணியைக் கட்டுவது?’

முதலில்இது ஒரு நாட்டுப் பிரச்சினை. 
அதனால் பொறுப்பு மத்திய
மாநில அரசுகளுக்குத்தான். 
முதல் பெற்றோரும் அவர்கள்தான் - 
வளர்ந்த நாடுகளில் 
‘GERONTOLOGY’  
அதாவது வயதானவர்களைப் 
பற்றிய பிரச்சினைகள்  
ஒரு துறையாகவே வளர்ந்து  
அதற்கு  மிக முக்கியத்துவம் 
கொடுக்கிறார்கள். 
இந்தியாவிலும் இது 
பரவ ஆரம்பித்திருக்கிறது,
ஒரு நல்ல அறிகுறி.

உடல்ரீதியாக முதுமை டைதல்,  
மனோரீதியாக முதுமை அடைதல், 
சமூகரீதியாக முதுமை அடைதல்  - 
என்று வயோதிகத்தின் பல பரிமாணங்களை 
ஆராய்ச்சிசெய்து ஒவ்வொன்றுக்கும் 
தேவையான திட்டங்களை 
வகுப்பதில் வளர்ந்த  நாடுகள் 
கவனம் செலுத்துகின்றன.

இந்த விஷயத்தில் இந்திய நாடு 
ரொம்பவே பின்தங்கியிருக்கிறது.