Wednesday, October 31, 2012

‘அமெரிக்கா’ பிடிச்சிருக்கா?'




கடந்த 10 ஆண்டுகளாக, நானும் என் மனைவியும் எப்போதெல்லாம் அமெரிக்காவிலிருந்து 
இந்தியாவிற்குப் போகிறோமோ அல்லது இந்தியாவிலிருந்து வரும் யாரையாவது 
சந்திக்கிறோமோ, அப்போதெல்லாம் எங்களிடம் கேட்கப்படுகிற கேள்விகள்: 
என்ன, அமெரிக்காவிலேயே செட்டில் 
ஆகிவிட்டீங்களே, எப்படி இருக்கிறீங்க
அமெரிக்கா பிடிச்சிருக்கா
சந்தோஷமாக இருக்கிறீங்களா?’

இவை ஒரு சம்பிரதாயத்திற்காகக் 
கேட்கப்படுகிற கேள்விகள் என்று நாங்கள் 
நினைத்தது கிடையாது. 
பலரிடம் எங்களைப் பற்றி 
ஒரு genuine concern  ஏற்பட்டதால் 
எழுந்த கேள்விகள்தான் என்று நினைக்கிறோம்,

60 ஆண்டுகளாக, ஒரு தனி அடையாளத்தோடு’ 
இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப்போன 
2 கிழங்கள் எப்படி வயதான காலத்தில் 
ஒரு புதிய சூழ்நிலையில் தங்கள் கடைசிக் 
காலத்தைக் கழிக்கப்போகிறார்கள்’ 
என்ற கவலை அவர்களில் பலருக்குத் தோன்றியிருக்கலாம். 
அவர்களுக்கு மட்டுமில்லை. 
ஆரம்ப காலத்தில் எங்களுக்கும் 
இந்த முடிவை எடுக்கும் முன் 
கொஞ்சம்’ பயம் இருந்தது.

கொஞ்சம்தான்.

ஏனெனில், எங்கள் முடிவு அமெரிக்காவைப் 
பற்றியது அல்ல.