Monday, November 12, 2012

என்னை நினைவு இருக்கிறதா? நான் தான் உங்கள் தாயின் மணிக்கொடி

பாரத தாயின் அருமை குழந்தைகளே!
நான் தான், உங்கள் தேசிய கொடி.
முதலில், என் தீபாவளி வாழ்த்துக்கள்.
நோய் நொடி இல்லாமல் வாழ, என் ஆசிகள்.

ரொம்ப நாளாகவே என்னுள் ஒரு உறுத்தல்.
உங்களிடம் பேசித்தான் ஆக வேண்டும்-
இது உங்களையும் என்னையும் பற்றியது.
"அதற்கு இது தான் நேரமா? 
நல்ல நாளும் அதுவா?"
என்று கேட்பது,புரிகிறது.
அதற்கு காரணம்,
நான் எப்படி தேசம் பூராவுக்கும் 
சொந்தமோ,அதே மாதிரி,
தீபாவளி ஒன்று தான்,ஒரு தேசிய 
பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
அதனால் தான், இந்த 
சந்தர்ப்பத்தை தேர்ந்தெடுத்தேன்.

எனக்கு நல்ல நினைவு இருக்கிறது..
1947,ஆகஸ்ட் 15,சுதந்திர தினம்.
எப்படி எல்லாம் எனக்கு மரியாதை செய்து
"தாயின் மணிக் கொடி பாரீர் "
என்று கோஷம் போட்டு,என் முன் 
"ஆடுவோமே..பள்ளு பாடுவோமே"
என்று ஆடி பாடி, நீங்கள் மகிழ்ந்தீர்கள்,
என்பது -ஒரு பசுமையான நினைவு.
அதே மாதிரி,
நம்முடைய முதல் குடியரசு தினம்-
ஜனவரி,26,1950.மறக்க முடியுமா?

என்னைப் பற்றிய, அந்த உற்சாகம் ,
உங்களில் எத்தனை பேருக்கு 
இன்னும் இருக்கு?-

சங்கடமான கேள்வி
விடை சுலபம்.
இல்லவே இல்லை.
Zero enthusiasm--
மன்னிக்கவும்..
வருடத்தில் 2 நாட்கள், நீங்கள் 
நிச்சயாமாக என்னை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய 
கட்டாயத்தில் இருக்கிறீர்க்ள்.
சுதந்திர தினம்,குடியரசு தினம்,
சம்பிராதய சடங்குகள்.
அவ்வளவு தானா,என் Roll?