Tuesday, October 01, 2013

டான்டேயின் நரகம் (Inferno)




























டான்டே (Dante)-(1265 -1321)

இவருடைய முழுப் பெயர் - 
Dante Alighieri

இவர் ஒரு இத்தாலிய கத்தோலிக்கக் 
கவிஞர். இவர் பிறந்த ஊர்  
Florence நகர், இத்தாலி. 
சில காரணங்களுக்காக, 
ப்ளாரன்ஸிலிருந்து வெளியேற்றப்பட்ட 
இவர், ரவீனா (Ravenna) என்ற ஊரில் 
மலேரியா வந்து இறந்தார். 
அங்கே உள்ள ஒரு மாதாகோவிலில் 
இவர் உடல் அடக்கம்செய்யப்பட்டிருக்கிறது. 
இவர் உடலை ப்ளாரன்ஸ் நகருக்கு 
எடுத்துச்செல்ல நடந்த முயற்சி 
கைகூடவில்லை. 
ப்ளாரன்ஸ் நகரில் இவருக்காக 
ஒரு காலி  கல்லறை காத்திருக்கிறது. 
ரவீனாவில் உள்ள இவருடைய 
கல்லறையில் எரிந்துகொண்டிருக்கும் 
விளக்குக்கான எண்ணெய் இன்றும் 
ப்ளாரன்ஸ் நகரிலிருந்து வருகிறது.

ஹோமர், ஷேக்ஸ்பியர் போல 
இவருடைய வாழ்க்கைப் பின்னணி 
பற்றியும் சரித்திர ஆசிரியர்களிடம் 
ஒத்த கருத்து இல்லை. 
சிறுவயதிலேயே மணமானவர். 
இவருக்கு பியாட்ரிஸ் என்ற காதலி 
இருந்ததாகவும், அவள்தான் அவருடைய 
பாடல்களில் இடம்பெற்றிருக்கிறாள் 
என்றும் சொல்லுகிறார்கள்.

இவருடைய masterpieceன் பெயர்  
La Comedia. 
ஆங்கிலத்தில் Divine Comedy. 

காமெடி என்பதால் இவர் காவியம் 
ஒன்றும் தமாஷானது அல்ல. 
இதன் முக்கிய கதாபாத்திரம் 
(டான்டேயேதான்) ஒரு மங்களகரமான, 
சந்தோஷமான முடிவை—
அதாவது கடவுளின் கருணை 
வடிவத்தை - சந்திக்கிறார். 
1302இல் ஆரம்பித்து 1321இல் 
இதை எழுதி முடித்தார். 
Divine Comedyயில் 14,233 வரிகள் 
உண்டு. ஒரு comparisonக்கு: 
ஹோமரின் Iliad - 15,693 வரிகள்; 
Odyssey - 12,110 வரிகள்; 
வர்ஜிலின் Aeneid - 9,890 வரிகள். 

இது 3 பகுதிகளான ஒரு காவியம்.

Inferno (4720) வரிகள்
Purgatorio (4755) வரிகள்
Paradiso (4758) வரிகள்

முகவுரை தவிர, ஒவ்வொரு பகுதியிலும் 
33 cantoக்கள் உண்டு - மொத்தம் 100.

இதனுடைய சாராம்சம் இதுதான்:

இது ஒரு பாவப்பட்ட கவியின் 
மேலுலுகப் பயணத்தைப் பற்றியது. 
இவர் முதலில் முடிவில்லாத 
தண்டனைகளைக் கொடுக்கும் இடம் 
வழியாக, தற்காலிகப் புனிதத் தன்மையை 
அடைந்து, முடிவில் கடவுளின் அளவில்லாத 
அன்பு உள்ள இடத்திற்கு செல்வது 
(endless bliss).


இந்தப் பயணம் - 5 1/2 நாட்கள்.



1300ஆம் வருஷம் பெரிய வெள்ளிக்
கிழமைக்கு (Good Friday) முந்தின 
ராத்திரி தொடங்கி 
Easter புதன் கிழமை 
முடியப் பயணம்.

மற்ற காவியங்கள் போல இதுவும் 
ஒரு travelogue காவியம்.

டான்டே இதை எழுதுவதற்குக் காரணம் - 
அவருடைய வார்த்தைகளில் - 
இந்த உலகத்தில் கஷ்டங்களில் உழன்றுகொண்டிருக்கும் 
மனித சமுதாயத்தை விடுவித்து, 
அவர்கள் ஒரு நிரந்தரமான 
சந்தோஷ நிலையை அடைய 
வேண்டும் என்பதுதான். 

இந்தக் காவியத்தில் முதல் பகுதியான  
infernoவைப் பற்றித் தெரிந்துகொள்ளுவோம்.

1300ஆம் வருஷம் - Good Fridayக்கு 
முந்தின இரவு டான்டே (வயது 35) 
ஒரு பயங்கரமான காட்டில் வழி 
தவறிவிடுகிறார்.

காலைச் சூரியனில் ஒரு அழகான 
மலையைப் பார்க்கிறார். 
அதை நோக்கி அடி எடுத்து வைக்கிறார். 
வழியை மறைத்து 3 மிருகங்கள் - 
சிறுத்தை, சிங்கம், ஒரு பெண் ஓநாய் - 
நின்றுகொண்டிருந்தன. 
மறுபடியும் காட்டிற்குச் செல்ல 
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 
அப்போது அவர் முன், அவருடைய 
மானசீக குருவான வர்ஜில் (Virgil) 
தோன்றி அவரை, Hell, Purgatory, 
வழியாக,Paradiseக்குக் கூட்டிச்
செல்வதாக வாக்குறுதி அளிக்கிறார். 
டான்டேக்கு உள்ளூர பயம். 
வர்ஜில் அவருக்குத் தைரியம் 
சொல்கிறார். தான், டான்டேயின் காதலி 
பியாட்ரிஸ் கேட்டுக்கொண்டதற்காக, 
அவருக்கு உதவிசெய்ய வந்ததாகச் 
சொல்கிறார். 











டான்டே வர்ஜிலைப் பின்தொடர்கிறார். 
இரண்டு பேரும் நரகத்தின் வாயிலை 
அடைகிறார்கள். அங்குள்ள இருட்டான இடத்திலிருந்து வரும் பயங்கரமான 
சத்தத்தைக் கேட்டு டான்டே அழுகிறார். 
வர்ஜில் அவரைச் சமாதானப்படுத்தி, 
அந்த இடத்தைப் பற்றிச் சொல்கிறார். 
அந்த இடத்தில் கடவுளிடம்  தங்களை ஒப்புவித்துக்கொள்ளாதவர்கள் 
(uncommitted souls) இருக்கிறார்கள். 
இவர்கள் தங்களுக்காகவே வாழ்ந்து, 
கடவுளை எதிர்க்காமலும், 
அதே சமயத்தில் சாத்தானின் 
அடியாளாக இல்லாமலும் இருந்தவர்கள். 
இவர்களுக்குச் சொர்க்கத்திலும் 
இடம் இல்லை, நரகத்திலும் இடம் இல்லை. பூச்சிகளால் கடிக்கப்பட்டு ரத்தத்தோடு 
வாழ்கிறார்கள். 
இவர்களைத் தாண்டி Acheron என்ற 
நதிக்கரையை அணுகுகிறார்கள். 
இங்கே ஆத்மாக்கள் நதியைக் 
கடக்கக் காத்திருக்கிறார்கள். 
Charon என்ற ஓடக்காரன் 
வேண்டாவெறுப்பாக டான்டேயையும் 
விர்ஜிலையும் கூட்டிச்செல்லச் 
சம்மதிக்கிறான். 
இதுதான் First Circle of Hell. 
இங்கே Homer, Ovid, Lucan என்ற 
பெரிய மனிதர்களைச் சந்திக்கிறார்கள். 
இவர்களின் தண்டனை, கடவுள் தரிசனம் கிடைக்காமல் அவதிப்படுவது. 

இப்போது 2ஆது Circle—

Hell properக்கு விஜயம் செய்கிறார்கள்.

இங்கே பயங்கரமான தோற்றத்துடன் 

Minos என்ற நீதிபதி உட்கார்ந்துகொண்டு, மகாபாவிகளைக் கடுமையான 
புயலில் சிக்கவைத்து அவஸ்தைப்பட 
வைக்கிறார்.

அடுத்த Circle 3இல் பெருந்தீனி 

தின்னும் பாவிகளை Cereberus 
என்ற ராட்சசன் மண்ணில் புதைத்து 
தண்டிக்கிறான்.

4ஆவது Circleஇல், 

Plutus என்பவரின் ராஜ்யம். 
இங்கே ஊதாரிகளும், பேராசைக்காரர்களும் 
ஒருவரை ஒருவர் பெரிய 
கற்களினால் அடித்துக்கொண்டு 
சித்திரவதைக்குள்ளாவார்கள்.

5ஆவது Circle - Marsh of Styx. 

இங்கே கடுங்கோபிகளும், 
சுமுகமற்றவர்களும் 
தண்டிக்கப்படுகிறார்கள்.

இங்கிருந்து டான்டே 6ஆவது Circle 

ஆன City of Dis. இங்கே நுழைவதற்கு 
ஒரு தேவதூதனின் உதவி வேண்டும். 
இதற்குள் நுழைந்த டான்டே எரியும் 
கல்லறைகளைப் பார்க்கிறார். 
இதில் எரிக்கப்படுபவர்கள் புறமதத்தவர்கள். 
தெய்வத்தை நிந்தனை செய்பவர்கள்.

7ஆவது Circleஐ நெருங்கும்போது 

ஒரு கடும் துர்நாற்றம் வரவேற்கிறது. 
கொஞ்சம் நேரம் அங்கு தங்கிவிட்டு 
ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் இறங்க ஆரம்பிக்கிறார்கள். 
முதலில் Minotaur என்ற ராட்சசனைச் 
சந்திக்கிறார்கள். கொதிக்கும் ரத்தம் 
உள்ள Phlegethon என்ற நதியை 
அடைகிறார்கள். 
இங்கே இருப்பவர்கள் மற்றவர்களைத் துன்புறுத்துகிறவர்கள், 
கொடுங்கோலர்கள், போர் ஆசைப்பிடித்தவர்கள். இங்குதான் அட்டில்லாவையும் 
அலெக்ஸாண்டரையும் சந்திக்கிறார்கள்.

Nessus என்ற Centaur இந்த நதியைக் 

கடக்க டான்டேவுக்கும் வர்ஜிலுக்கும் 
உதவுகிறார். 
இது 7ஆவது Circleன் இரண்டாவது சுற்று. 
இங்கே தற்கொலை செய்துகொண்டவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். 
இவர்கள் மரம், செடிகளாக மாறுகிறார்கள். 
இங்கே ஊதாரிகள், வேட்டை நாய்களால் துரத்தப்பட்டு உடல் கிழிய 
அவஸ்தைப்படுகிறார்கள். 
3ஆவது சுற்றில் 
தெய்வத்தை நிந்தனை செய்பவர்கள்.
(blasphemers), 
ஆண்களைப் புணரும் ஆண்கள் 
Sodomites), 
கந்து வட்டிக்காரர்கள் (usurers) 
என்ற பாவிகள் நெருப்பு மழையினால் 
அவஸ்த்தைக்குள்ளாகிறார்கள்.

இங்கிருந்து 8ஆவது Circleக்குச் 

செல்கிறார்கள். 
Geryon என்ற ராட்சசன் மேல் 
சவாரிசெய்து Malebolge என்ற 
இடத்திற்குச் செல்கிறார்கள்.  
மோசடி   பண்ணின நபர்கள் 
தண்டிக்கப்படும் இடம் இது. 
சாட்டை அடிதான் தண்டனை. 
தற்புகழ்ச்சியாளர்களுக்குத் தண்டனை 
மலங்கள் நிறைந்த கால்வாய்களில் 
குளியல். 
குறிசொல்பவர்களும், (fortune tellers), 
ஆரூடம் பார்ப்பவர்களும்  (diviners)  
தங்கள் தலைகள் திருப்பி வைக்கப்பட்டு 
பின்நோக்கி நடக்கிறார்கள். 
லஞ்சம் வாங்கியவர்கள் (grafters) 
எரியும் குழிகளில் தள்ளப்படுகிறார்கள். 

மேலும் அநேக பாவிகளைச் சந்தித்த பின் 

9ஆம் Circleக்கு வந்து சேருகிறார்கள். 
இது ஒரு உறைந்த ஏரி. 
இங்கே பெரிய உருவமுள்ள பூதங்கள், 
துரோகிகளை ஏரியின் உட்பகுதியில் 
வைக்கிறார்கள். 
இங்கே உறவினர்களுக்குத் துரோகம் 
பண்ணியவர்கள், நாட்டுக்குத் துரோகம் 
பண்ணியவர்கள், நண்பர்களுக்கும் 
விருந்தாளிகளுக்கும் துரோகம் 
பண்ணியவர்கள், எஜமானர்களுக்கும் 
நன்மை செய்தவர்களுக்கும் துரோகம் 
பண்ணியவர்கள் என்று 
ஒவ்வொருவருக்கும் தண்டனை உண்டு.

இங்கே Lucifer என்ற பூதம் தன்னுடைய 

3 வாய்களில் Judas, Brutus, Cassius - 
ஆகியோரைக் கடித்துக் குதறுவதைப் 
பார்த்ததாக எழுதுகிறார்.

டான்டேயும் வெர்ஜிலும் இப்போது பூமியின் 

மத்திய பிரதேசத்திற்கு வருகிறார்கள். 
இது சாத்தானின் இடம். 
சாத்தானை நேரில் பார்க்கிறார்கள். 
வெர்ஜில், டான்டேயிடம் உடனே கிளம்ப 
வேண்டும் என்கிறார். வெர்ஜிலின் முதுகில் 
டான்டே ஏறிக்கொள்ள, 
சாத்தானின் உடல் வழியாக சரிந்து 
சாத்தானின் உலகத்திலிருந்து 
வெளிவந்துவிடுகிறார். 
மெதுவாக உயிருள்ள பூமிக்கு வந்து 
நட்சத்திர கூட்டங்களைப் பார்க்கிறார்.

Infernoன் climax சாத்தானைப் பார்ப்பது. 

கடவுளின் தரிசனம் கிடைப்பது Paradiso.

மேலே சொல்லப்பட்டது ஒரு 

சிறு outlineதான். 
Divine Comedyஐப் பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ள  நூலகத்தையோ இன்டர்நெட்டையோ நாடலாம்.

The Levels of Hell


In Dante's Inferno, Hell is described as having 9 different levels, or circles, each lower than the last. As one descends into the depths of hell, he comes closer to the 9th circle where Satan himself resides. Each level of hell is reserved for different types of sinners, and different punishments are inflicted on the damned depending on the nature and severity of their sin. The greater their sin, the lower the level to which they are condemned to spend eternity.


























இந்தக் கட்டுரை எழுத ஆரம்பித்தபோது, 
என் மேல் அபிமானமுள்ள நண்பர்கள் 
சிலர் "ஏன் இந்த சப்ஜக்ட்? 
என்று கேட்டார்கள். 
அவர்கள் உபயோகித்த ஆங்கில 
வார்த்தை "morbid". 
தமிழில் அருவருக்கத்தகுந்த, 
நோய்வாய்ப்பட்ட என்று அர்த்தம். 
நரகம் என்ற வார்த்தை நினைக்க 
கூடாத சொல் அல்ல.

எல்லா மதத்தினரும் ஒத்துக்கொண்ட 

ஒரே விஷயம் - தப்பு செய்தவர்கள் 
தண்டிக்கப்பட வேண்டியவர்கள். 
தண்டனை, அவரவர் தப்பையும் 
அவரவர் வாழும் சமுதாயத்தையும் 
பொறுத்தது.

நரகம் என்று ஒன்று இருக்கிறதா?

கண்டவர் விண்டதில்லை. 

ஆனால் ஏன் இருக்கக் கூடாது? 
பூலோகத்தில் ஒவ்வொரு நாகரிகத்திலும் 
சில கோட்பாடுகள் உண்டு. 
அதை மீறுகிறவர்கள் 
தண்டனைக்குள்ளவார்கள். 
அதற்காகத்தான் சட்டம், போலிஸ், 
ஜட்ஜ், கோர்ட் என்று வைத்திருக்கிறார்கள்.

ஏன் இந்த லாஜிக்கைத் தொடரக் கூடாது? 

மனிதன் செய்த குற்றங்களை 
மனிதனால் ஏற்படுத்திய சட்டங்கள் 
தண்டிக்கும்போது, ஏன் இறைவன், 
நாம் செய்த பாவங்களுக்குத் தண்டனை 
கொடுக்கக் கூடாது?

மனிதன் கோர்டில் வாக்குச் 

சாதுர்யத்தினால் தண்டனையிலிருந்து 
தப்பலாம். 
ஆனால், கடவுள் கோர்ட்டில் 
அது முடியாது. ஏனெனில், 
அப்போதைக்கு அப்போது வீடியோ 
ஆதாரத்தோடு நம் கணக்கை எழுதிவிடுகிறார்.

தண்டனைகளின் வர்ணனை கொஞ்சம் 

ஓவராகவும் கடுமையாகவும் இருக்கலாம். 
இத்தனை மதங்கள் சொல்லியும், 
பயமுறுத்தியும் மனிதன் திருந்தியதாகத் 
தெரியவில்லையே?

வியாஸரும் சரி, டான்டேயும் சரி, 

தண்டனைகளின் கடுமையை மிகைப்படுத்தி 
சொல்வதற்கான காரணம் 
"பயம்" ஒன்றுதான்.
 "பயம்"தான் பெரும்பான்மையான 
மக்களைத் தப்பு செய்யாமல் 
இருக்க வைக்கிறது. 
இன்றைக்கும் தமிழ் நாட்டுக் 
குழந்தைகள், போலிஸுக்கும் 
சட்டத்திற்கும் அடங்கி நடக்கிறார்கள் 
என்றால் அறியாப் பருவத்திலிருந்தே 
தாய்மார்கள் "சாப்பிட அடம்பிடிக்காதே. 
போலிஸ் மாமா, பூச்சாண்டி வந்துவிடுவார்" 
என்று பயமுறுத்தியே காரியத்தைச் சாதித்து
கொண்டதுதான். 

Spare the rod and spoil the child 
என்ற தத்துவத்தை எல்லா மதபோதகர்களும் 
ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றிவந்ததுதான்.




இது என் 99ஆவது கட்டுரை. 
அடுத்தது என் நூறாவது. 
எதைப் பற்றி எழுதப்போகிறேன்? 
கொஞ்சம் சஸ்பென்ஸ்.

...கிளறல் தொடரும்.

2 comments:

பாலாஜி said...

மிக அருமை. "Inferno" வை பொறுமையாகப் படித்து, முழுமையாகப் புரிந்து கொள்ள நேரம் இல்லாதவர்களுக்கு நல்லதொரு சுருக்கம்.
"திருநெல்வேலியின் குப்பை", கிளறக் கிளற மணக்கிறதே! குப்பையை சேகரித்தவரின் தேர்வுத்திறனுக்கு ஒரு சபாஷ்!!
இதுவே தமிழ் நாடாக இருந்தால் உங்கள் நூறாவது பதிவுக்கு, தெருவை அடைத்து தோரணம் கட்டி, 'ராஜா' மைக் செட்டிங் போட்டு, கூழ் ஊற்றிக் கொண்டாடி இருப்பேன்!! வாழ்த்துக்கள்!
நூறாவது பதிவுக்கு ஆறாமல் காத்திருக்கும்...
பாலாஜி

பாலாஜி said...

மிக அருமை. "Inferno" வை பொறுமையாகப் படித்து, முழுமையாகப் புரிந்து கொள்ள நேரம் இல்லாதவர்களுக்கு நல்லதொரு சுருக்கம்.
"திருநெல்வேலியின் குப்பை", கிளறக் கிளற மணக்கிறதே! குப்பையை சேகரித்தவரின் தேர்வுத்திறனுக்கு ஒரு சபாஷ்!!
இதுவே தமிழ் நாடாக இருந்தால் உங்கள் நூறாவது பதிவுக்கு, தெருவை அடைத்து தோரணம் கட்டி, 'ராஜா' மைக் செட்டிங் போட்டு, கூழ் ஊற்றிக் கொண்டாடி இருப்பேன்!! வாழ்த்துக்கள்!
நூறாவது பதிவுக்கு ஆறாமல் காத்திருக்கும்...
பாலாஜி