Monday, May 20, 2013

அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது (Over Work) உங்களைக் கொல்லுமா?



கொல்லாது............ என்று 
அடித்துச்சொல்கிறார் 
Dr. Joseph F Montague. 
இவர் குடல், வயிறு 
சம்பந்தமான நோய்களைக் 
குணப்படுத்தும் 
ஒரு மருத்துவர்.














அவர் மேலும் சொல்கிறார்:
அளவுக்கு மீறி அதிக வேலையைச் 
செய்பவர் என்று நீங்கள் உங்களை நினைத்தால் அதற்குக் கீழ்க்கண்ட 
ஏதாவது ஒன்றுதான் காரணமாக 
இருக்கும்.

"நீங்கள் உங்களுக்குப் 
பொருந்தாத (wrong) 
வேலையில் இருக்கிறீர்கள் 
அல்லது 
அடைய முடியாத 
லட்சியங்களை 
மனதில் உருவாக்கிக்
கொண்டிருக்கிறீர்கள் 
அல்லது 
நேரத்திற்குச் சாப்பிடும் 
பழக்கம் இல்லாதவராக 
இருந்திருப்பீர்கள். 
கடைசியாக
உப்புப் பெறாத 
விஷயத்திற்காகக் 
கவலைப்படுபவராக 
இருந்திருப்பீர்கள்."

U.S. News & World Report 
என்ற பத்திரிகைக்கு அவர் 
கொடுத்த பேட்டியிலிருந்து 
சில பகுதிகள்:

கேள்வி: டாக்டர்
சமீப காலமாக
வயிற்றுப் புண் (Ulcers), 
இருதய வலி 
(Heart aches), இன்னும் 
சில வியாதிகளால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்களே
இது, அளவுக்கு மீறி அதிக 
வேலையைச் செய்வதனாலா?
டாக்டர்: நிச்சயமாக இல்லை. 
என்னுடைய வாடிக்கையாளர்களில் 
யாருமே அதிக வேலையினால் 
செத்ததில்லை. 
அதீதமுயற்சி-அதாவது பேராசை
அடைய முடியாத லட்சியக் 
கனவுகள்தான். 
ஏமாற்றம் கவலை என்று 
பல பிரச்சினைகளை உண்டாக்கி வியாதியஸ்தர்களாக ஆகிறார்கள்.
கேள்வி: ஓயாத பதற்றம் 
(nervous tension) என்றால் என்ன
எதனால் அது வருகிறது?
டாக்டர்: ஓயாத பதற்றம் 
என்பது 
ஒரு பயப்பட வேண்டிய 
சமாச்சாரம் இல்லை. 
அது ஓரளவாவது 
எல்லோரிடமும் இருக்கும்
இருக்க வேண்டும். 
அது அளவோடு இருந்தால்தான் 
சில உபயோகமான விஷயங்களை 
நாம் அணுக முடியும். 
ஓயாத பதற்றம் 
ஒரு பிரச்சினையே 
இல்லை.