Tuesday, July 09, 2013

காப்பி அடிப்பதில் தவறில்லை என்கிற சில அமெரிக்க நாகரீகங்கள்- குடித்துவிட்டு கார் ஓட்டும் பழக்கத்தைத் தடுக்கும் முயற்சிகள்.

கட்டுரைத் தாமதத்திற்குக் காரணம், 
என்னுடைய 4 வார இந்தியப் பயணம். 
14 மாத இடைவெளிக்குப் பிறகு 
சென்னை விஜயம். 
First Impression என்ன என்று கேட்டால் 
ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். "முன்னேற்றம்" எதிலும் எல்லாவற்றிலும் முன்பைவிட அதிகப்படி முன்னேற்றம்.
இட்லி/காபி விலை, காய்கறி விலை, 
பாதைகளில் நெரிசல், noise polution, 
நவீன மருத்துவமனைகளின் 
எண்ணிக்கை, இளைஞர்களின் 
கேளிக்கை, கொண்டாட்டங்கள், 
கிரிக்கெட் மோகம்இப்படிப் பற்பல 
விஷயங்களில் நல்ல முன்னேற்றம்.
எதிலும் குறைபாடு இல்லையா? 
இருக்கிறது. 
குறைந்துகொண்டுவருவது "
மனிதாபிமானம்." 
எங்கு திரும்பினாலும் 
"நமக்கென்ன?" 
நம்மால் என்ன செய்ய முடியும், 
எல்லாம் நம் தலைவிதி, 
இந்த அரசியல்வாதிகளிடம் 
மாட்டிக்கொண்டு சாக வேண்டிய நிலை 
என்று புலம்பிக்கொண்டே வாழ்க்கையை 
நடத்தும் சுபாவம். 
தன்னம்பிக்கை வெகுவாகக் குறைந்துகொண்டுவருகிறது.  
வருத்தமாக இருந்தாலும், சொந்த 
பந்தங்களுடன் இருக்க வாய்ப்புக்      
கிடைத்ததற்கு சந்தோஷப்பட்டுத்தான் 
ஆக வேண்டும்.

இப்போது கட்டுரைத் தொகுப்பின் 
கடைசிப் பகுதிக்கு வருவோம்.

சென்னை மற்றும் பெரிய நகரங்களில்
நிலவும் இன்றைய அவல நிலை 
இளைஞர்களிடம் இருக்கும் 
குடிப் பழக்கம்.
நல்ல வேளை, அந்தப் பழக்கம், 
இன்னும் "Social drink" என்ற 
நிலையில்தான் இருக்கிறது. 
அந்த நிலை மாறி addiction 
என்ற நிலைக்கு மாற நேரம், 
காலம் தேவையில்லை. 
social drink  நிலையிலேயே 
இளைஞர்கள் செய்யும் அட்டகாசங்கள் 
சில சமயங்களில் அளவுக்கு மீறியிருக்கின்றன. 
குறிப்பாக, குடித்துவிட்டு கார், 
இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டி
நிறைய விபத்துகளை உண்டாக்குகிறார்கள்
 என்பதைப் பற்றி நிறையவே மீடியா வெளிப்படுத்திவருகின்றன. 
ஒரு சில பணக்கார, நடுத்தர வர்க்கத்தினரும் 
இந்த வேலையில் ஈடுபட்டுவருகிறார்கள். 
குடித்துவிட்டு கார் மற்றும் இதர 
வாகனங்கள் ஓட்டுவது 
சட்டப்படி குற்றம். அதற்கான தண்டனையும் 
கடுமை. ஆனால், நடைமுறையில், 
இந்தச் சட்டம் பெரும்பான்மையான 
நிகழ்வுகளில் "toothless" ஆகத்தான் செயல்பட்டுவருகிறது.

மேல்நாடுகளில், குறிப்பாக, 
அமெரிக்காவில் குடித்துவிட்டு கார்
ஓட்டும் பழக்கம், விளம்பரதாரர்கள்
சொல்லுவதுபோல், 99 சதவீதம் இல்லை. 

இது எப்படி சாத்தியம்?