Thursday, August 29, 2013

பார்கின்ஸன்ஸ் வியாதி (Parkinson's Disease)



இது மருத்துவ சம்பந்தமான 
கட்டுரையானதால் ஒரு மறுப்போடு 
(disclaimer) ஆரம்பிக்கிறேன். 

காமெடி நடிகர் விவேக், ஒரு படத்தில் 
தன் காதலிக்கு கான்ஸர் வியாதி 
இருப்பதாகத் தவறாகப் புரிந்து
கொண்டு (குழப்பம் அந்தக் காதலியின் 
ராசி - கடகம், அதாவது cancer). 
தன் நண்பனிடம் இவ்வாறாகப் புலம்புவார்.

"கான்ஸர் என்ற வியாதி, குணப்படுத்த 
முடியாது என்பதையே நான் சினிமா 
மூலம்தான் தெரிந்து கொண்டேன்" 
என்பார். நான் அவ்வளவு 
"ஞானசூனியன்" இல்லை. 
இருந்தாலும் நான் மருத்துவத்தை 
முறையாகப் படித்தவன் இல்லை. 
என்னுடைய மருத்துவ அறிவு புத்தகப் 
படிப்புகள் மூலம் கிடைத்தது. 
அதாவது "ஏட்டுச் சுரைக்காய்" என்று தெரிவித்துக் கொண்டு கட்டுரையைத் தொடர்கிறேன்.

இன்றைய சமுதாயத்தில் மக்கள் 
எத்தனையோ வியாதிகளினால் 
அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 
புதிது புதிதாக வியாதிகள், புதிது புதிதாக மருந்துகள். ஆட்கொல்லி என்று 
சொன்ன வியாதிகள்- காலரா, 
டபுள் நிமோனியா, சுலபமாகக்  குணப்படுத்தப்படுகின்றன. 
மருத்துவ விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். 
அப்படியிருந்தும் சில வியாதிகளின் 
காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்க 
முடியாமல் இருக்கின்றன. 
அப்படிப்பட்ட வியாதிகளில் ஒன்றுதான் "பார்கின்ஸன்ஸ்" வியாதி. 
இந்த வியாதியைப் பற்றி விவரமாக 
மக்களுக்கு எடுத்துச் சொல்லிய 
ஆங்கில நாட்டு James Parkinson 
என்பவரின் பெயரையே இந்த வியாதிக்குச் சூட்டிவிட்டார்கள்


















இவர் 1817ஆம் ஆண்டு 
Essay on the Shaking Palsy என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். 
அதற்குப் பிறகுதான் இந்த வியாதியைப் 
பற்றின ஆராய்ச்சிகள் வெகுவாக 
நடந்தன - நடந்து கொண்டிருக்கின்றன. 

முதல் கேள்வி - 1817க்கு முன் 
இந்த வியாதி இருந்ததா? 
இருந்தது. 
அதற்கான விளக்கங்கள் 
இதோ-